கத்தோலிக்க துறவி பால் அலங்காரம் அவர்கள் தன்னனுபவ கதையாக சொன்ன வாய்மொழி கதை இது. இக்கதை குறித்து ஆய்வாளர் எழுத்தாளர் ஆ.சிவசுப்ரமணியன் அவர்கள் எழுதிய வாய்மொழி கதைகள் எனும் தொகுப்பில் வாசித்தேன். "தீண்டாமை என்பது மிகைப்படுத்தப்பட்ட ஒன்று,அதெல்லாம் இப்போது கிடையாது என்று நகரவாசியான கத்தோலிக்கர் ஒருவர் அழுத்தமாக கூறிய போது அதை மறுத்து தன் அனுபவமாக இக்கதையை துறவி பால் அலங்காரம் பகிர்ந்து இருக்கிறார்.